நகரசபை நடத்தும் வாசிப்பு மாத அறிவுக் களஞ்சிய அரையிறுதிப் போட்டி

a.k.3ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சிகளில் அறிவுக்களஞ்சிய போட்டியில் அரையிறுதிக்கு தெரிவான கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா ரி.பி. ஜாயா வித்தியாலயம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற அறிவுக்களஞ்சிய போட்டி

நிகழ்ச்சி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சிகளை நகரசபை பொது நூலகத்தின் பொன் விழா நிகழ்வுகளுடன் சேர்த்து சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்துள்ளார். நடைபெற்ற அரையிறுதி அறிவுக்களஞ்சிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயமும் கிண்ணியா ரி.பி. ஜாயா வித்தியாலயமும் தெரிவானது. நிகழ்வுக்கு நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் ஏ.கே.பாஜில் குத்தூஸ், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், கிழக்கு மாகாண ஜே.பி சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பாயிஸ், நூலகர் எம்.ரி.சபறுள்ளா கான், ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்களென பலரும் கலந்து கொண்டனர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment