சிறார் ஆபாசப் படங்கள்: முடிவு கட்டப் போகும் கூகுள் பிங் சேர்ச் என்ஜின்!

child– SHM

லண்டன்: சிறார் ஆபாசப் படங்களை தேடுவோரின் கண்களுக்கு.. இனிமேல் ‘ரிசல்ட்’ கிடைக்காது. காரணம். இப்படிப்பட்ட ஆபாச தேடல்களுக்கு கூகுளும், மைக்ரோசப்ட்டின் பிங் சேர்ச் (Search Engine)  என்ஜினும் முடிவு கட்டப் போகின்றன.

அதாவது இத்தைகய தேடல்களை அவை BLOCK செய்யவுள்ளன. எனவே இனிமேல் யாராவது Child Porn என்று டைப் செய்து  சேர்ச் செய்தால் அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்காது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார் பாலியல் விஷயங்கள் தொடர்பான தேடல்களுக்கு தடை விதித்துள்ளது கூகுள் சேர்ச்சும் மைக்ரோசப்ட் நிறுவனமும்.

இதுபோன்ற சிறார் பாலியல் விஷயங்களைத் தேடுவது இனி சட்டவிரோதமாக கருதப்படும். மேலும் சிறார்களின் பாலியல் படங்களைத் தேடுவது சட்டவிரோதம் என்ற எச்சரிக்கை வாசகமும் இனி இடம் பெறுமாம்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரப் போக்கை ஒழிக்கும் வகையில் மைக்ரோசப்ட்டும், கூகுளும் கைகோர்த்துள்ளன. அதன் விளைவே இந்தத் தடையாகும்.

19-1384851081-teenager-600-jpg[1]

மேலும் சிறார்களின் ஆபாசப் படங்களை எந்த வகையிலும் தேட முடியாதபடி கிடுக்கிப் பிடி போடவுள்ளனர்.

இதுகுறித்து கூகுள் தலைவர் எரிக் ஸ்மித் லண்டனில் கூறுகையில், விரைவில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் 150 மொழிகளில் எச்சரிக்கை வாசகத்துடன் கூடியதாக இனிமேல் எச்சரிக்கை வாசகம் இடம் பெறும்.

child

இந்தியாவின் முதன்மை மொழிகளான தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், லண்டனில் இணையதள பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ள நிலையி்ல் இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையதள பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்து கமரூன் பேசுகையில்,

இணையதளங்கள் மூலம் சிறார்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தும் செயலுக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும். சிறார்களை பாலியல் வக்கிரங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு சர்ச் என்ஜின்களில் பெருமளவிலான மாற்றம் வர வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

child abuse

மேலும் கடந்த ஜூலை மாதம் டேவிட் கமரூன் கூறுகையில்,

உலக அளவில் முன்னணியில் உள்ள சேர்ச் என்ஜின்கள் கூகுள் மற்றும் மைக்ரோசப்ட்டின் பிங்தான். இவை இரண்டும் 95 சதவீத தேடுதல்களை நடத்துகின்றன. எனவே இவர்கள் நினைத்தால் சட்டவிரோதமான முறையில் சிறார்களின் பாலியல் படங்கள் மக்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Published by

Leave a comment