-டீன்பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி ஜென்னத் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி அதன் ஆயுட்காலத் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் jp தலைமையில் புதிய காத்தான்குடி மட்-அன்வர் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா MA-MP அவா்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸபர் உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவா்கள், ஜென்னத் மஹல்லா மக்கள் என்னுடைய அரசியல் பயனத்தில் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர்கள் ஆகவே அப்பிரதேச மாணவா்களின் இல்ல விளையாட்டுப் போட்டியில் நான் கலந்து கொள்வதனை என்னி மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
மேலும் பாலர்களின் நலன் கருதி ஜென்னத் பாலர் பாடசாலைக்கு மலசல கூடம் ஒன்றினை உடனடியாக அமைத்துக் கொடுக்க அதிகாரிகளை பணித்தார்.
பெற்றோர்கள் பலரும் தனது நன்றிகளை அசை்சருக்கு தெரிவித்தனர்.


Leave a comment