வாழைச்சேனை: மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திட்குட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் தரம் 6 தொடக்கம் 13வரையான மாணவர்களுக்கான 2012ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று(13.11.2013) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் க.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இப் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும்; ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதோடு விசேட அதிதிகளாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் செல்வநாயகம் ‘கிருஸ்ணராஜா, பிரதிக்கல்வி பணிப்பாளர்-நிருவாகம் திருமதி குலேந்திரகுமார் சுஜாதா, கோறளைப்பற்று கோட்டத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் நாகலிங்கம் குணலிங்கம், ஓய்வு பெற்ற சேவைக்கால ஆலோசகர் பாலிப்போடி கணேசமூர்த்தி, பழையமாணவரும் பொறியிலாளருமான சோமசுந்தரம் முரளி, பழைய மாணவரும் சட்டத்தரணியுமான கந்தசாமி தயாபரன், பழைய மாணவனும் உதவி வங்கி முகாமையாளருமான நடராசா மதனசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment