உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான கருத்தரங்கு

02[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் அமானா தகாபுல் நிறுவனத்தின் அனுசரனையுடன் நீரிழிவு நோய் தொடர்பான கருத்தரங்கு நேற்று 13-11-2013 புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமூக நலனுக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் நீரிழிவு நோய் என்றால் என்ன? அதன் உருவாக்கம் மற்றும் விபரீதங்கள்,நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பன தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீரிழிவு வைத்திய நிபுணர்களான டாக்டர் எம்.உமாகாந்தன்,டாகடர் டீ.கனேகபாகு ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் ஏ.எல்.ஷியாம்,காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் செயலாளர் எம்.எஃப்.எம்.றிஸ்மி,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன், சமூக நலனுக்கான அமைப்பின் உறுப்பினர்கள்,அமானா தகாபுல் நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீரிழிவு நோய் சம்பந்தமான இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் நீரிழிவு நோய் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

06[1]

02[1]

09[1]

Published by

Leave a comment