காத்தான்குடியில் உணவகங்கள் திடீர் பரிசோதனை

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவினர் இன்று 13-11-2013  புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள உணவகங்களுக்கு விஜயம் செய்து திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள உணவகங்களுக்குச் சென்று குறித்த பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது உணவகங்களின் சுகாதாரம் தொடர்பிலும் அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் உணவக உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இப்பரிசோதனை நடவடிக்கையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.றபீக்,பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உணவகங்களில் திணைக்களத்தினால் ஒட்டப்படும் ஸ்டிக்கர்ஸ்களையும் இவர்கள் பார்வையிட்டனர்.

காத்தான்குடி நகர சபையின் தீர்மானத்தின் படி காத்தான்குடியிலுள்ள உணவகங்களில் சிகரட் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment