மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2013 மாவட்ட கலை இலக்கிய விழா 12-11-2013 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – அரசடி தேவநாயகம் மண்டபத்தில் மாவட்ட அரசாங் அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் கொழும்பு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விஷேட மற்றும் கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன்,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு-கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கே.பிரேம்குமார்,முன்னாள் மட்டக்களப்பு மேலதிக அரசாங் அதிபர் கே.எம்.எம்.ஷெரீப்,எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொள்வுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் எழுகதிர் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து ,வரவேற்பு நடனம்,வரவேற்பு நடனம்,கிராமியப் பாடல்,கோலாட்டம் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment