கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இயற்கை அணர்த்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெரும் பிரித்தானியா: வாரிவழங்கும் நன்கொடையே காரணம்!

31_oct2008[1]– MJ

லண்டன்: உலக நாடுகளில் கருணை (Charity)) நன்கொடை வழங்குவதில் முன்னிற்கும் நாடாக பிரித்தானியா திகழ்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் பனியிலும் குளிரிலும் தளராது வேலை செய்து உழைக்கும் பணத்தில் நன்கொடைகளுக்காக இம்மக்கள் சில சில்லறைகளை ஒதுக்குகின்றனர். அச்சில்லறைகள் உலகில் ஏனைய நாடுகளில் பல கோடிகளைத் தாண்டிச் செல்கின்றன.

தற்பொழுது பிரித்தானியாவில் பொப்பி (Poppy Appeal) வாரம் அனுஷ்டிக்கப்பட்டு நிறைவடைந்திருக்கின்றது. வருடாந்தம் நவம்பர் மாதம் இந்நன்கொடை திட்டம் பிரித்தானியாவில் இடம்பெறுவது வழக்கம். 2012ம் ஆண்டு பொப்பி வாரத்தில் 35 மில்லியன் பவுண்கள் நன்கொடையாக பொதுமக்களால் பொப்பி நன்கொடை நிறுவன உண்டியல்களில் சேமிக்கப்பட்டிருந்தன. ( ஒரு பவுண்: SLR ரூபா 208) இவ்வருடம் 37 மில்லியன் பவுண்கள் எதிர்பார்க்கப்படுவதாக பொப்பி நன்கொடை கோரல் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

fareshare_million_meal_appeal_colleague[1]

இவ்வருடத்துக்கான பொப்பி நன்கொடை தற்பொழுதான் நிறைவடைந்திருக்கும் நிலையில், பயங்கர சூறாவளியில் 13,000 மக்களைப் பலிகொடுத்து தற்பொழுது நிர்க்கதியாகியிருக்கும் பிலிப்பினுக்கான நன்னொடைகள் பொதுமக்களிடம் கோரப்பட்டிருக்கின்றன.

மக்கள் மனமுவந்து இந்த நன்கொடைக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, உண்டியல்களை நிரப்பி வருகின்றனர். இதற்கான பாரிய முயற்சிகள் இவ்வார இறுதி நாட்களில் நகரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் பாடசாலை, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது நிறுவனங்களின் உதவியுடன் நிதி சேகரிக்கப்பட இருக்கின்றன.

images[1]

இது தவிர, பிலிப்பைன் நாட்டுக்கான அணர்த்த நிதி பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு வழங்க்கப்பட இருப்பதாக  பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சற்று முன்னர் தெரிவித்துள்ளர்.

அது மாத்திரமன்றி, கடந்த காலங்களில் உலகில் இடம்பெற்ற இயற்கை அணர்த்தங்கள், யுத்தங்கள் மற்றும் வரிய நாடுகளுக்காக நன்கொடை கோரிக்கைகளை முன்வைக்கும் நிறுவனங்களும், நன்கொடை அதிகமாக சேகரிக்கப்படும் நாடாகவும் பிரித்தானிய உலகளவில் போற்றப்பட்டு வருகிறது.

Person giving twenty pounds to charity

உலகில் எங்கும் இல்லாதவாறு, தான் உழைக்கும் ஒவ்வொரு மணித்தியாலத்தின் புவுணுக்கும் அரசாங்த்துக்கு கூடுதல் வரிகொடுக்கும் மக்கள் இங்குதான் இருக்கின்றனர். தன் செலவு போக மிஞ்சும் பணத்தில்  இவ்வாறான நன்கொடைகளுக்கு (Charities) மக்கள் வாரிவழங்கி வருகின்றனர்.

சிரியா மக்களுக்கான நன்கொடை கோரல் கடந்த வருடம் கோரப்பட்டது. பிரித்தானிய மக்களின் பாரிய நன்கொடை வழங்களில் 30 மில்லியன் பவுண்ஸ் திரட்டப்பட்டன. இது மட்டுமா? 2012ம் வருடம் ஈரானில் இடம்பெற்ற பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைப்பணம் 107 மில்லியன் பவுண்கள்!2004ம் ஆண்டு சுனாமியால் அதிதீவிரமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேணியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு 80 மில்லியன் பவுன்களை பிரித்தானிய மக்கள் வாரி வழங்கினர்.

80960D8F880CD86B998EBEE0CDC2C9D1[1]

இவ்வாறு நன்கொடைகளை பல நூற்றாண்டுகளாக வாரி வழங்கிவரும் பிரித்தானியா மக்களின் நன்கொடையின் மகிமையால் இறைவன் இம்மக்களை இயற்கை அணர்த்தங்களில் இருந்து பாதுகாத்து வருகின்றான். பிரித்தானிய வானிலை மற்றும் அரசாங்க தகவலின்படி கடந்த 2000 வருடங்களாக பிரித்தானியாவுக்கு இயற்கை அணர்த்தங்கள் ஏற்படவில்லை.

வருடாந்தம் இடம்பெறும் கால நிலை மாற்றங்களைத் தவிர, பாரிய அணர்த்தங்கள் இதுவரை இங்கு இடம்பெற்றிருக்கவில்லை. தர்மம் தலை காக்கும், எனும் நியதிக்கமைய இறைவன் இம்மக்களை இயற்கை அணர்த்தங்களிலிருந்து பாதுகாத்து வருகின்றான்.

கனவன், மனைவி, பிள்ளைகள், தாங்கள் உழைப்பதை தங்களுக்கு செலவு செய்வதும், கனவனுக்குத் தேவையானதை கனவனும், மனைவிக்குத் தேவையானதை மனைவியும், பிள்ளைகளுக்குத் தேவையானதை (18வயதக்கு  மேற்பட்டோர்கள்) பிள்ளைகளுத் தங்களது பணங்களில் வாங்க வேண்டும்.

31_oct2008[1]

இதே போல் சொந்தக்காரர்களிடம், நண்பர்களிடம் கடன் கேட்பதோ, கூட்டுச் சேர்ந்து செலவடிக்கும் பழக்கவழக்கங்களோ  இங்கில்லை.  கூட்டுச் சேர்ந்து செலவடித்தால் அதனை பகிர்ந்து கொள்ளவேண்டும். இதே போல் கடன் தேவை என்றால் கடன் வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. தேவையானோர் அதன் மூலமாகவே கடன் பெற்றுக் கொள்கின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்  ஆகிய நாடுகளில் மாத்திரம் 180,000 தொணடர் நன்கொடை நிறுவனங்கள் பதியப்பட்டிருக்கின்றன.  இந்நன்கொடை அமைப்புக்கள் போன்று அதிகளவான அமைப்புக்கள் உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் அமையப் பெறவில்லை!

பிரித்தானியாவில் அமையப்பெற்றுள்ள பிரபலமான முதல் 10 நன்கொடை அமைப்புக்களும் அதன் வருமானங்களும் கீழ் நிழற்படுத்தப்பட்டுள்ளன.

நன்கொடை அமைப்புக்கள்                                                   வருமானம்

1 209,131 THE BRITISH COUNCIL 738,502
2 1,036,733 THE ARTS COUNCIL OF ENGLAND 613,359
3 205,533 NUFFIELD HEALTH 576,400
4 1,089,464 CANCER RESEARCH UK 492,627
5 205,846 THE NATIONAL TRUST FOR PLACES OF HISTORIC INTEREST
OR NATURAL BEAUTY
435,918
6 1,136,855 CARDIFF UNIVERSITY 425,539
7 268,369 THE CHARITIES AID FOUNDATION 399,946
8 202,918 OXFAM 385,500
9 213,890 THE SAVE THE CHILDREN FUND 332,881
10 313,999 UNITED CHURCH SCHOOLS FOUNDATION LTD 325,687

இவ்வாறு அங்குள்ள மக்கள் குளிரிலும் கடும்பனியிலும் இரவு பகலாக உழைக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி திரட்டும் உண்டியல்களில் நிறைத்து அனுப்பும் பணம் இன்று எமது நாட்டில் பல அரசியல்வாதிகளின் வங்கிகளிலும் இரத்தங்களிலும் சேமிக்கப்பட்டிருப்பது இறைவன் அறிந்த உண்மை.

CharityShop_2031464a[1]

எமது நாடுகளில் பாடசாலை  நன்கொடைக்கு கடைத் தெருக்களில் சென்றாலும், கடைகளில் முதலாளிமார்கள் இருந்துகொண்டு, ‘முதலாளி இப்பதான் வெளியே போராரு-பிறகு வாங்க’ என்று முதலாளியே சொல்லியனுப்பும் கஞ்சத்தனம் குடியிருப்பதால்தான் நாட்டில் பஞ்சமும் பட்டிணிகளும் அதிகரித்து வருகின்றன.

இஸ்லாம் நன்கொடைகளை ஏவுகிறது. இம்மையிலும் கப்ரிலும் மறுமையிலும் அதிக பாக்கியங்களைப் பெற்றுத்தரும் ஓர் நல்லமலாக இந்த நன்கொடைகள் அமைகின்றன என்பது ஓர் தனிச்சிறப்பு.

Published by

Leave a comment