காத்தான்குடி: காத்தான்குடி அவுஸ்திரேலியன் கணினி நிறுவனத்தால் 2012, 2013 ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான இலவச 2 மாத கணனி பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காத்தான்குடி அவுஸ்திரேலியன் கணினி நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
குறித்த இப்பாட நெறிக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து கோரப்படுகின்றன.
நல்ல தகைமையான ஆசிரியர்களால் நடாத்தப்படவுள்ள இப்பாடநெறியில் இணைந்து கொள்ள விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் எதிர்வரும் 14.11.2013ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்யுமாரும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு 0779177799, 0756262934 தொலைபேசி இலக்கள் ஊடாகவோ அல்லது aucskky@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் விண்ணப்பதாரிகள் வேண்டப்படுகிறார்கள்.


Leave a comment