2013 பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சர் ஏ.எல்.எம்.றிசான் பங்கேற்பு

DSC02981பழுளுல்லாஹ் பர்ஹான்

ஹம்பாந்தோட்டை: பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை றுஹுணு மாகம்புர சர்வதேச மாநாட்டு மன்டபத்தில் 10.11.2013 தொடக்கம் 14.11.2013 வரை நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் இலங்கை இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.றிசான் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளார்.

இவர் உத்தேச தேசிய இளைஞர் கொள்கை பற்றி வெளிநாட்டு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜனாதிபதி சாரணரும், பிரித்தானியா ‘டியூக்எடின்பார்க்’ பல்கலைகழத்தின் தலைமைத்துவம், ஆளுமை போன்ற துறைகளுக்கு சர்வதேச விருதினையும் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார்.

இவர் பொதுநலவாய மாநாடு வெற்றிபெற ஆற்றிவரும் சிறந்த பணிக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இவருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

DSC03020 copy

Published by

Leave a comment