அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தகவல்!
கொழும்பு: இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துக் கொள்ளாததால் இம்மாநாடு நடைபெற மாட்டாது என்று கூறுவதில் எவ்வித உண்மையமில்லை . அன்னார் வராததன் காரணத்தை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மன்மோகன் சிங் வரவில்லை என்பதால் பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் இருந்துவிடப் போவதில்லை இலங்கையில் நடைபெறும் இந்த மாநாடு ஏனைய மாநாடுகளை விடவும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம்.
இலங்கையில் மனித எரிமைகள் உரிமைகள் பற்றியும் ஊடகச்சுதந்திரம் பற்றியும் பேசப்படுகின்ற நேரத்தில் கலந்துக் கொள்ள நாம் அன்னாருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். கட்டுப்பாடின்றி திறந்து விட்டிருக்கிறோம். சிலர் விசா மறுத்தாலும் நாம் அவ்வாறு செய்யவில்லை .
பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக மத்திய நிலையத்தை பார்வையிட வந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், அவர்கள் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியதாலேயே நாட்டைவிட்டு திருப்பி அனுப்பப்பட்டனர் எனக் கூறினார்.
மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு இதில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.எனினும் அவர்கள் வருவது வராதது அவரவர் விருப்பம்.
இந்திய பிரதமருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும்இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாத தனிப்பட்ட பிரச்சினை அவருக்கு இருக்கலாம். இது குறித்து அன்னார் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். lk
Leave a comment