மட்டக்களப்பு பெண்களின் கைப்பணி பொருட்களும் பொதுநலவாயக்கண்காட்சியில்!

kaipani_200_133[1]கொழும்பு: பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பு பத்தரமுல்லையில் நடைபெறவுள்ள மாபெரும் கைப்பணிக் கண்காட்சியில் மட்டக்களப்பு  பெண்களின் கைப்பணி பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல்; 17 ஆம் திகதிவரை கொழும்பு – பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் கைப்பணி பொருட்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது.

 இந்த மாபெரும் கைவினைக் கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினால் செய்யப்பட்ட கைப்பணி உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ளதாக கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.கங்காதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ‘மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் இந்த அமைப்பின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினைக் கொண்டு கைப்பணிப் பொருட்கள்  உற்பத்தி  செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பெண்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் பார்வையிடுவதற்குமான ஒரு நல்ல சந்தரப்பமாக இதனைக் கருதுகின்றேன்.கிழக்கில் யுத்தத்தினால் பாதிப்புற்று கைவினை செயற்திட்டத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்குமான ஒரு வாய்ப்பாகவும் இதனைக் கருதுகின்றேன்.

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு நடைபெறும் இம்மாபெரும் கைவினைக் கண்காட்சியில் இலங்கையில் நாலாபக்கமும் இருந்து கைப்பணி உற்பத்திப் பொருட்கள் வரவுள்ளன. இதில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு அமைப்புக்களில் எமது அமைப்பும் ஒன்றாகும்’  என அவர் மேலும் தெரிவித்தார். lk

Published by

Leave a comment