காங்கேயனோடை: தொடர்சியான வெள்ளம் மற்றும் ஆற்று நீர் பெருக்கெடுப்பாளும் முழுமையாக சேதமடைந்த மட்டக்களப்பு ஆரயம்பதி செயலகப்பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தின் பிரதான வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகள் விரைவில் தொடருமென பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதற்கமைய தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியிலிருந்து நடைபெற்று முடிந்த காங்கயேனோடை வீதி அபிவிருத்தி வேலைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.லியனகே தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதனையடுத்து இவ்வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகளை மிக விரைவில் இதற்குத் தேவையான நிதியினை வழங்கி மேற்கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார். இவ் விஜயத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.லியனகே மாவட்ட இணைப்பாளர் எஸ்.குமரன் காங்கயேனோடை அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எம்.முஜாகித் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Leave a comment