காத்தான்குடி: உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2012ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி செயலாற்றுகைப் போட்டியில் காத்தான்குடி நகர சபை மூன்றாவது தடவையாக முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். குறித்த இத்தகவல் மாகாண உள்ளுராட்சி சபைகள் திணைக்களத்தினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு,சபை பொதுக் கூட்ட ஒழுங்குகள்,வினைத் திறன் மிக்கதா?இல்லையா? என்பதை கவனத்திற் கொண்டே குறித்த உள்ளுராட்சி செயலாற்றுகைப் போட்டி வருடாந்தம் நடாத்தப்பட்டு வருவதாக நகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை கிழக்கு மாகாணத்திலுள்ள 45உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த மூன்று வருடங்களாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். காத்தான்குடி நகர சபை 2010,2011,2012 ஆகிய மூன்று வருடங்களிலும் குறித்த உள்ளுராட்சி செயலாற்றுகைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment