‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ பட்டத்தை வென்றார் கேப்ரியேலா இஸ்லர்

10-1384056730-venezuelan-crowned-miss-universe-201354--jpg[2]– SHM

மொஸ்கோ: 2013ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பிரபஞ்சத்தின் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான போட்டியான, ‘மிஸ் யூனிவர்ஸ்-2013’ போட்டி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்றது. அதில் பல கடினமான சுற்றுக்களைக் கடந்து தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக பணி புரிந்து வரும் வெனிசுலா நாட்டு அழகி மிஸ் யுனிவர்ஸ்-2013 பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

மொஸ்கோவில் நடைபெற்ற 62வது பிரபஞ்ச அழகிப் போட்டியான ‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ போட்டியில் கிட்டத்தட்ட 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு சுற்றுக்களில் கலந்து கொண்டு தேர்வாகி, ‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ பட்டத்தை வென்றார் ‘மிஸ் வெனிசுலா’ பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர்(25).

பட்டத்தை வென்ற அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ மகுடத்தை சூட்டி மகிழ்வித்தார்.

10-1384056836-miss-universe-600-jpg[1]

10-1384056730-venezuelan-crowned-miss-universe-201354--jpg[2]

Published by

Leave a comment