ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி பலஸ்தீன் பயணம்- பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமனம்

RIFTHI ALI[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீனத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணமாகியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட ஊடகவியலாளரான இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளராவார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி பலஸ்தீனத்தில் நடைபெறும் இரண்டாவது பலஸ்தீன் இளைஞர் வார நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே பலஸ்தீன் சென்றுள்ளார். இதன்போது பலஸ்தீன் முன்னாள் ஜனாதிபதி யாசீர் அரபாத்தின் எட்டாவது நினைவு தினம் மற்றும் பலஸ்தீன் சுதந்திர தினம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் காரணமாகவே எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக உப செயலாளர் ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RIFTHI ALI[1]
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி
 

Published by

Leave a comment