பெண்களுக்கெதிரான வன்முறையை குறைப்பதற்கும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வது தொடர்பிலான செயமலமர்வு

DSC02404நமது நிருபர்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையை குறைப்பதற்கும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வது தொடர்பிலான செயமலமர்வுகளை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனம் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் மேற் கொண்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான செயலமர்வொன்று இன்று(10.11.2013) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய பரீட் மண்டபத்தில் நடைபெற்றது. பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.சி.அப்தல் அஸீஸ் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இதில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹரீஸ் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாபா பஹ்மியா பைறூஸ் உட்பட அத்ன அதிகாரிகள் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment