கொழும்பு: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது என்பதில் அமைச்சர்கள், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சையை உடனடியாக கைவிட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையினால் ஒரு சிறு தொகையினர் மட்டுமே நன்மையடைகின்றனர் என்றும் பெருந்தொகையானோர் விரக்தி அடைகின்றனர் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க கூறினார். TK
Leave a comment