மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவது கட்டாயம்: முகம் தெளிவாக தெரியும் படி அணிய வேண்டும்

helmetகொழும்பு: மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறியோர் முதல் பெரியோர் வரை (ஹெல்மட்) தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முகத்தை முற்றாக மறைக்கும் தலைக் கவசம் அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த புதிய ஏற்பாடுகளை கடைப்பிடிக்கும் படி மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

helmetமுழு முகத்தையும் மூடும் வகையிலும் கறுப்பு கண்ணாடியைக் கொண்ட தலைக்கவசம் அணிவதன் மூலமும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்வதாக தெரிவித்த அவர் இதனை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்த திட்டமிட்டதாக அவர் மேலும் தெரி னவித்தார்.

ஹெல்மட் அணியும் போது அதற்கான பட்டி இறுக்கமாக இருக்கும் படி பட்டிகளை கிளிப் செய்து கொள்ள வேண்டும். முகம் தெளிவாக தெரியும் விதத்திலான ஹெல்மட்டுகளையே அணிய வேண்டும். 1981 ம் ஆண்டின் 21 ம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் 158 (2) மற்றும் 237 ம் பிரிவுகளின் படி இப்புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.TK

Published by

Leave a comment