மேயர் பத­வி­யி­லி­ருந்து சிராஸ் இரா­ஜி­னா­மா

kalmunai (2)கல்­முனை: கல்­முனை மாந­கர மேயர் பத­வி­யி­லி­ருந்து சிராஸ் மீரா­சாஹிப் இன்று காலை இரா­ஜி­னாமாச் செய்­­துள்­ள­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­ற­ன. இன்று காலை கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமைச் சந்­தித்த சிராஸ் மீரா­சாஹிப் தனது இரா­ஜி­னாமாக் கடிதத்தை கையளித்­த­தா­கவும் இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் கட்டித் தழுவிக் கொண்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­ற­து.

இது தொடர்பில் இன்று பிற்­பகல் கொழும்­பி­லுள்ள கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லா­மில் இடம்­பெ­ற­வுள்ள விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­படும் என கட்­சியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ள­து.

Published by

Leave a comment