– அகமட் ஆசிர்
ஒருவர் பாவித்த மிஸ்வாக்கை மற்றவர் பாவிப்பதற்கு இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.இதன் காரணமாக சகலருக்கும் மத்தியில் நட்புஇபரஸ்பரம் உண்டாகின்றது.கணவன்இமனைவி, சகோதர,சகோதரிகளுக்கு மத்தியில் நட்புறவு உண்டாவதற்கு மிஸ்வாக் பாவணை பங்களிப்புச் செய்கின்றது.ஆனால் ஒருவர் பாவித்த மிஸ்வாக்கை மற்றவர் பாவிக்கும் போது நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்பதனைப் பின்வரும் நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.
‘நபி(ஸல்)அவர்கள் மிஸ்வாக் செய்து விட்டு அதனைக் கழுவி சுத்தம் செய்வதற்காக என்னிடம் தருவார்கள் நான் அதனைக் கழுவி சுத்தம் செய்து அதனால் மிஸ்வாக் செய்வேன் பின்னர் மீண்டும் அதனைக்கழுவி சுத்தம் செய்து விட்டு நபி(ஸல்)அவர்களிடம் கொடுப்னே;’
அறிவிப்பவர் : ஆயிஷா (றழி)
ஆதாரம் : அபூதாவுத்
நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்வதில் எவ்வளவு ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்பதைப் பின்வரும் சம்பவம் தெளிவு படுத்துகின்றது
ஒரு முறை அபூபக்கர் (றழி) அவர்களுடைய மகன் அப்துர்றஹ்மான் (றழி) அவர்கள் மிஸ்வாக் செய்து கொண்டே நபி (ஸல்) அவர்களைப் பார்வையிட வந்தார்கள் அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் ஸக்றாதுடைய இறுதி வேளையில் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்துர்றஹ்மானிடம் இருந்த மிஸ்வாக்கைப் பார்த்தவுடன் தனது மரண வருத்தத்தை மறந்து மிஸ்வாக்கின் மீது மோகம் கொண்டு அதன்பால் பார்வையைச் செலுத்தினார்கள்.இதனை அவதானித்த ஆயிஷா (றழி) அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டவர்களாக தனது சகோதரர் அப்துர்றஹ்மானிடம் இருந்த மிஸ்வாக்கை வேண்டி அதனைமென்று துப்பரவு செய்து பாவிப்பதற்கு ஏதுவானதாக அமைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் சிறந்த முறையில் மிஸ்வாக் செய்தார்கள். எந்தளவென்றால் ஆயிஷா(றழி) அவர்கள் கூறுகின்றார்கள் றசூல்(ஸல்)அவர்கள் இதற்கு முன்னர் இந்தளவு சிறந்த முறையில் மிஸ்வாக் செய்ததை நான் காணவில்லை. மிஸ்வாக்செய்து முடித்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் கைவிரல்களை உயர்த்தி அல்லாஹ்வை ஒருமைப்படுத்திவிட்டு சகலரும் அல்லாஹ்வின் பாலே திரும்பவேண்டும் என்பதை சைகை மூலம் உணர்த்தினார்கள். பின்னர் நபி(ஸல்)அவர்கள் ஆயிஷா(றழி)அவர்களின் நெஞ்சினிலே சாய்ந்தவர்களாக மரணித்தார்கள்.
ஆதாரம்; : புகாரிஇமுஸ்லிம்
அறிவிப்பவர் :ஆயிஷா(றழி)
ஆகவேதான் இறுதி நிலையிலும்கூட நபி(ஸல்)அவர்கள் மிஸ்வாக் செய்து வாயைத்துப்பரவு செய்து உயிரைக் கைப்பற்றும் மலக்குகளை வாய்மணத்தோடு வரவேற்றிருக்கின்றார்கள் என்பது இந்த நபிமொழியிலிருந்து விளங்கப்படுகின்றது. எது எவ்வாறு இருந்தாலுங்கூட சிலருக்கு எவ்வளவுதான் மிஸ்வாக் செய்தாலும் வாய்த்துர்வாடை நீங்குவதில்லை. இதனை வைத்திய ரீதியிலேயே அணுக வேண்டும்.
வாய்த்துர்வாடைக்கான காரணமும் அதன் நோயியற் தன்மையும்
நுவழைடழபல யனெ Pயவாழிhலளழைடபல ழக ர்யடவைழளளை)
பலவகையான பரிசோதனைகள் ஆய்வுகளின் மூலமாக வாய்த்துர்வாடைக்கான பிரதான காரணங்களாக முரசுடன் சம்பந்தப்பபட்ட நோய்களும் (( புiபெiஎவைளை ) பல்ஈறுடன் சம்பந்தப்பட்ட Pநசழைனழவெவைளை) நாக்கின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவகையான படிவும் (வுழபெரந உழயவiபெ) குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றை விட ஈரலிலும் சிறுநீரகத்திலும்சுவாசத்தொகுதியிலும் ஏற்படும் சில குறைபாடுகலும் காரணமாக அமைந்துள்ளன.
உமிழ்நீர்இமுரசுப்பாயம் (ஊசநஎiஉரடயச கடரனை ) குருதி போன்றவற்றில் காணப்படும் சில சேதனப்பதார்த்தங்கள் வாயினுல் காணப்படும் நுண்ணங்கிகளினால் துர்வாடையை உருவாக்கக் கூடிய ஐதரசன் சல்பைட்டு (ர்2ளு2) ஆநவாலடஅநசஉயிவயn மற்றும் னுயைஅiநௌ ஆக மாற்றப்படும் போது துர்வாடை உருவாகின்றது.
இப்பதார்த்தங்கள் உமிழ்நீரில் (ளுயடiஎய) கரைந்த நிலையில் திரவாமக் காணப்படும்போது அல்லாமல் ஆவியாகக் கூடிய நிலைமைக்கு மாறும்போதே துர்வாடை உருவாகின்றது.இது வாய் உலர்வடையும்போது இன்னும் அதிகமாகின்றது.
நாக்கினுடைய மேற்பரப்பு இறந்த கலங்களையும் சிறு உணவுப் பதார்த்தங்களையும்இமற்றும் நுண்ணங்கிகளையும் தாங்கி நிற்கக்கூடிய ஒரு இடமாகவுள்ளதால் இதன் மூலமாகவும் துர்வாடை உண்டாகின்றது.மேலும் தொண்டைஇமற்றும் வாயுடன் சம்பந்தப்பட்ட நாசிக் குழிகளில் ஏற்படும் சில நோய்களும்வாய்த்துர்வாடைக்குக் காரணமாக அமைகின்றன. அத்துடன் உணவுக்கால்வாய்த்தொகுதியோடு சம்பந்தப்பட்ட சில நோய்களும் மேலும் ஈரல் சிறுநீரகக் குறைபாடுகளும் அவற்றிற்குரிய குறிப்பான துர்வாடைளை உருவாக்குகின்றன அத்துடன் சிலமருந்து வகைகளும்இ அவை உட்கொள்ளப்படும் போது வாயில் துர்வாடை உண்டாகின்றது மேலும் வாயில் உண்டாகும் புண்இ பல் கழற்றிய பின் உண்டாகும் புண் ஆகியவற்றாலும் துர்வாடை உண்டாகின்றது.
(தொடரும்)
தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்
Leave a comment