ஜெனீவா: பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசர் அரபாத்தின் மரணத்தை விசாரித்துக்கொண்டிருக்கும் பாலத்தீனக் கமிட்டி, இஸ்ரேல் மட்டும்தான் இந்த விஷயத்தில் இருக்கும் ஒரே சந்தேகப்படக்கூடிய அமைப்பு என்று கூறுகிறது.
2004ல் அரபாத்தின் மரணம் குறித்த மிகச் சமீபத்திய விஞ்ஞான அறிக்கைகள் அவர் முதுமையாலோ, உடல்நலக்குறைவாலோ இறக்கவில்லை, மரணமும் இயற்கையாக நிகழவில்லை என்பதைக் காட்டுவதாக இந்த குழு கூறியது.
முழு உண்மையையும் வெளிக்கொண்டுவருவதற்கு தனது விசாரணைகள் தொடரும் என்றும் அந்தக்குழு கூறியது.
இஸ்ரேல், அரபாத்தின் மரணத்தில் தனக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளது.
இந்த வாரம் முன்னதாக வந்த சுவிஸ் நாட்டு வல்லுநர் குழு அறிக்கை ஒன்று , தோண்டியெடுக்கப்பட்ட பாலத்தீனத் தலைவர் அரபாத்தின் உடலில் , சாதாரணமாக இருக்கும் கதிரியக்கப் பொருளான போலோனியத்தின் அளவை விட, 18 மடங்கு அதிகம் இருந்தது என்று கூறியது.
BBC
Leave a comment