காத்தான்குடி சுஹதா வித்தியாலயத்திள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

– முகம்மட் சஜி

DSCF2682[1]காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டத்தின் சுஹதா வித்தியாலயத்திள் புனர் நிர்மானிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவம் சமீபத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில்  கல்லூரியின் பிராத்தனை மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் கல்வி மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகளிள் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை அம்சங்களும் இடம்பெற்றன. 

வைபத்தில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று சாதணை படைத்த இம்மாணவர்களை கௌரவித்தார்.

நிகழ்வில் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி  மட்டக்களப்பு மத்தி கல்விப்பணிப்பாளர் அகமட் லெவ்வை  காத்தான்குடி  கோட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சுபைர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment