கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்எம்.எம்.ஹரீசுக்கு கல்வி சமூகமும் பராட்டு

harees– பழுலுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: அண்மையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பிரதி அதிபர் ஏ.ஏ.கபுர் கல்முனை வலய திட்டமிடல் பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தாரினால் தாக்கப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட சர்சையினால் கல்வி சமூகம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத்தலைவரும், கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக கல்முனை வலயத்திலிருந்து பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கிண்ணியா கல்வி வலயத்திற்கும் அவரது சகோதரரான ஏ.எல்.எம்.ஹம்ஸா கல்முனை கார்மல் பாத்திமாக்கல்லூரிக்கும் அவரது மற்றுமொரு சகோதரரான ஏ.எல்.எம்.நஸீர் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கும் உடனடியாக செயற்படும் படியாக இன்று இடமாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்எம்.எம்.ஹரீசுக்கு கல்முனைக்குடி, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு கல்வி சமூகமும் பொதுமக்களும் பெற்றோரும் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கல்லூரியின் மகா சபையும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

கல்முனை பிரதேசத்திலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் இனிமேல் இப்படியான விரும்பத்தகாத சம்பமொன்று இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த இடமாற்றம் சிறந்ததொரு பாடமாக அமையுமென எல்லோரும் தெரிவிக்கினறனர்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியல் மட்டுமல்ல அண்மையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு இவர் காரணமாக அமைந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த இக்கல்லூரியினை மீள கட்டியெழுப்புவதற்காக பல தன்னார்வு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு முன்வந்த போதிலும் இந்த கல்விப்பணிப்பாளர் அப்போதிருந்த அதிபருடன் கொண்டிருந்த கோபம் காரணமாக பழைய மாணவர் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க காகிதாதிகளை பயன்படுத்தி எமது சங்கங்களிடம் போதிய பணம் இருப்பதாகவும் எந்தவொரு தன்னார்வு நிறுவனங்களும் இக் கல்லூரியை மீள கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவித்திருந்தார். இதனால் கோள் நிறுவனம் , நோர்வே புனர்வாழ்வுக் கழகம் மற்றும் கெயார் நிறுவனம் என்பன இக் கல்லூரியின் புனருத்தான வேலைகளை இடைநடுவில் கைவிட்டுச் சென்றன. அதனைத் தொடர்ந்து இக்கல்லூரிக்கு கிடைக்கவிருந்த பல அபிவிருத்திப் பணிகளை ஏ.எம்.{ஹசைன் , எம்.ஏ.எம்.முஸ்தபா , ஏ.பீர் முஹம்மட் , மர்ஜுனா ஏ காதர் மற்றும் ஏ. ஆதம்பாவா ஆகியோர் அதிபர்களாக இருந்த காலத்தில் தான் மேற் கொண்ட பல நடவடிக்கைகள் காரணமாக இடை நிறுத்தி இருந்தார். இன்றும் இக்கல்லூரின் பௌதீக வளம் நிறைவடையாத நிலையில் வகுப்பறை தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அதிபர்களினது ஆசிரியர்களினதும் பெற்றோர்ளினதும் அரசியல்வாதிகளினதும் பழைய மாணவர்களினதும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களினதும் தயாக மனப்பான்மையினால் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை அம்பாறை மாவட்டத்தில் பெற்று இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் அதிகளவிலான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி பெருமை சேர்த்துள்ளது. பாடசாலைக்கு அவப் பெயரினை தோற்றுவித்து கல்வி நடவடிக்கைகளையும் அபிவிருத்தி பணிகளையும் முடக்கி தான் இக்கல்லூரிக்கு அதிபராக வரவேண்டும் என்பதற்காக பல தடவைகள் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கல்முனை பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்திய அரசியல்வாதிகள் தடையினை ஏற்படுத்தி இருந்தனர்.

தற்போது இக் கல்லூரிக்கு நிதந்தர அதிபர் ஒருவர் இல்லாத நிலையில் சிறந்ததொரு அதிபரை நியமித்து இக்கல்லூரியை உடனடியாக அபிவிருத்தி செய்ய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கல்வி சமூகம் மீண்டும் பராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

harees
எம்.எச்.எம்.ஹரீஸ்

Published by

Leave a comment