டாக்கா: எதிர்வரும் 2014 மார்ச் மாதம் 16ம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 6ம் திகதிவரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபது20 கிரிக்கட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் இம்மாதம் 17ம் திகதி விற்பனைக்கு வருகிறது.
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் அணுசரணையுடன் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இந்த நுழைவுச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக விற்பனைக்கு விடுகிறது. நேரடியாக அல்லது இணையத்தளங்கள் மூலமாக நுழைவுச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்யமுடியும்.
நுழைவுச்சீட்டு ஒன்றின் குறைந்த பெறுமதி 50 டாக்காவிலிருந்து 2000 டாக்காவரை விற்கப்படுகிறது. அமெரிக்க டொலர் பெறுமதியில் 0.75 டொலராக இத்தொகை அமையும். (ஒரு டொலருக்கும் குறைவானது).
இறுதிப்போட்டிக்கான நுழைவுச்சீட்டின் விலை 200 டாக்காவிலிருந்து 4000 டாக்கா வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 3 அமெரிக்க டொலரிலிருந்து 56 டொலர் வரைக்கும் இதன் பெறுமதி அமைகின்றது.
உலகில் கிரிக்கட் போட்டிகளைக் காண்பதற்கு அதுவும் ஓர் உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண்பதற்கு நிர்ணயிக்கப்ட்ட மிகக் குறைந்த தொகையாக இந்நுழைவுச்சீட்டுக்கள் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment