முதல்நாள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த, கமலேஷ் சர்மா, இளவரசர் சார்ள்ஸ், ஜுலியா கிலார்ட் உரை

commonகொழும்பு: பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் நாள் அமர்வுகள் சுமார் ஒன்றேகால் மணித்தியாலங்கள் வரை நடைபெறுமென தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

உச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரிட்டிஸ் இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாயத்தின் தற்போதைய தலைவியும், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான ஜுலியா கிலார்ட் ஆகிய நால்வரும்உரை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அனைத்து இலத்திரனி யல் ஊடகங்களும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்ய வசதிகள் செய் யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நாளை 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை வரை வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவிருப்ப தாகவும் இதனை முன்னிட்டு கட்டுநாயக்க கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மத்தள, கண்டி, கல்கிசை ஆகிய பகுதிகளில் என்று மில்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

53 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன் போதே மேற்கண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதேவேளை, பொதுநலவாய மாநாடு தொடர்பில் செய்தி சேகரிக்குமுகமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரம் ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றுவதாகவும் செயலாளர் சரித்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, உள்நாட்டு ஊடகவியலாளர் களுக்கான பொதுநலவாயத் திற்குரிய அடை யாள அட்டை இன்று காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஹோட்டல் கலதாரியில் வைத்து விநியோகிக்கப்படவுள்ளது.

தகவல் சேகரிப்பிற்கான ஊடக மத்திய நிலையம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். ஊடகவியலாளர் களுக்கான அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய மத்திய நிலையத்தை பொதுநலவாயத்திற்கான அடையாள அட்டையின்றி எவரும் பயன்படுத்த முடியாதெனவும் செயலாளர் சரித்த ஹேரத் கண்டிப்பாக கூறினார்.

பொதுநலவாய உச்சி மாநாடு மற்றும் அதனுடன் இணைந்து நடத்தப்படும் ஏனைய பேரவைகள் தொடர்பி லான அனைத்து அம்சங்களும் http://www.chogm2013.lk என்ற இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகையில், 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் 05 ஆயிரம் பொலிஸார் வீதி போக்குவரத்து ஏற்பாடுகளிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவரெனக் கூறினார்.

பொதுநலவாய மாநாடு மற்றும் அதற்குரிய நிகழ்வுகளையொட்டிய ஏற்பாடுகளினால் எக்காரணம் கொண்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாதெனவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, செய்தியாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த அவர், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற அதேவேளை, பிறருடைய உரிமைகள் பறிபோகும் வகையிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடம் வழங்க மாட்டாதெனவும் பொலிஸ் பேச்சாளர் ஆணித்தரமாக கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரியரத்ன அத்துகல, ஜனாதிபதிப் பேச்சாளர் மொஹான் சரமநாயக்க, ஜனாதிபதியின் வெளிவிவகார பேச்சாளர் அநுராதா ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். TK

Published by

Leave a comment