கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.. 5 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்களை தற்பொழுது இந்தியா பெற்றுள்ளது.சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கர் 10 ஓட்டங்ககளைப் பெற்றிருந்த போது, சிலிங்போர்ட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழக்கப்பட்டு மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் தமது 200வது போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்தப் போட்டி மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக கொல்கத்தாவில் அவர் பங்கேற்கும் 199வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு விக்கெட் எடுத்திருந்தார் டெண்டுல்கர்.
நேற்று 238 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டம் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment