கொழும்பு: இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை நேரங்களில் பஸ் வண்டியில் அல்லது தம்வசம் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குறிப்பிட்டார்.
கடமைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் தங்களின் கையடக்கத் தொலைபேசிகளை தமக்குரிய டிப்போக்களில் அல்லது தனிப்பட்ட ஓரிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சகல டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். lk
Leave a comment