பாகிஸ்தான் அரசுக்கு ரகசிய கடிதம் எழுதிய ஒபாமா! பரபரப்பான தகவல்கள் வெளியானது

obamaவாஷிங்டன்: பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரகசிய கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாகிஸ்தான் அரசுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், லஷ்கர்- இ- தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவ முன்வந்தால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இத்தகவலை அந்நாட்டின் அமெரிக்க தூதராக பணியாற்றிய ஹுசைன் ஹாகினி எழுதியுள்ள “மேக்னிபிஃஸன்ட் டெல்யுஷன்ஸ்” என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ் மூலம் இக்கடிதத்தை எழுதி அனுப்பியதாக  குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிடும் வகையில், சில நாடுகள் பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதை ஏற்க முடியாது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு இடையேயுள்ள நீண்டகால பிரச்னைகளை தீர்த்து கொள்வதுதான் என்னுடைய தெற்காசிய கனவு என்றும் ஒபாமா தெரிவித்துள்ளதாக ஹாகினி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ls

Published by

Leave a comment