சாய்ந்தமருது: கல்முனை அக்கரைப்பற்று பிரதான நெடுஞ்சாலை சாய்ந்தமருது பிரதான வீதியிலிருந்து செல்லும் உள்ளக வீதியான கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பழைய சலுசலா வீதி இதுவரையில் புனரமைக்கப்படாது குன்றுங் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை அதிகமாக சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவர்களும் ஜீ.எம்.எம்.எஸ் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்களும் பயன்படுத்துகின்றனர்.
அது மட்டுமல்லாது இவ்வீதியின் இரு மருங்கிலும் அரச காரியாலயங்களில் வேலை செய்யக் கூடிய அரச உத்தியோகத்தர்கள் வசிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இவ்வீதி புனரகை;கப்படாததினால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மழை காலங்களில் குறித்த வீதியில் நீர் தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் பெரும்பான்மையான வீதிகள் புனரமைக்கப்பட்டும் குறித்த வீதி புனரமைப்புச் செய்யப்படும் என அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டும் இதுவரையில் புனரமைக்கப்படாதது கவலையளிப்பதாகவும் இது தொடர்பில் சம்பந்த அதிகாரிகள் கவனமெடுத்து உடனடியாக இவ்வீதியை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த வீதிக்கு கொந்தராத்துக் காரர் ஒருவர் அடிக்கடி வருவதாகவும் இவ்வீதி புனரமைப்புச் செய்வதற்கான பணம் திருப்பியனுப்பட்டுள்ளது எனக் கூறி வருவதாகவும் இதன் உண்மை நிலை தெரியாதெனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a comment