உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எம்.ஜஹ்பர் அவர்களுக்கு இரண்டாவது தடவையாக 2013ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருது

Jawfar sirபழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கல்வியமைச்சினால் வருடாந்தம் சிறந்த சேவையை ஆற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து வழங்கும் பிரதீபா பிரபா 2013ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருதை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எம். ஜஹ்பர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தணவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் மஹரகம தேசிய கல்வியகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தணவினால் 2013ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருது ஆசிரியர் ஜஹ்பருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவர் காத்தான்குடியைச் சேர்ந்த முகைதீன் மற்றும் அலியார் பாத்தும்மா தம்பதிகளின் புதல்வராவார்.

அது மட்டுமல்லாது கடந்த 2012ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருதையும் இவர் பெற்றுக்கொண்டதுடன் இந்த விருது இரண்டாவது தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

எம்.எம். ஜஹ்பர் ஆசிரியர் அவர்களுக்கு எமது ‘யுவர் காத்தான்குடி’ இணையதளமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது.   

Jawfar sir

Published by

One response to “உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எம்.ஜஹ்பர் அவர்களுக்கு இரண்டாவது தடவையாக 2013ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருது”

  1. Weldone jaufer
    Niyas
    UK

Leave a comment