தமிழ்,சிங்கள,முஸ்லிம் மதத்தவர்கள் பங்குகொண்ட 2013 கிழக்கு மாகாண கலை இலக்கியப் பெருவிழா மட்டக்களப்பில்

5-DSC04593பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் 2013 கலை இலக்கியப் பெருவிழா 01-11-2013 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யூ.யு. வெலிக்கலவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான விருது மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கான ‘வித்தகர் விருது என்பன தமிழ்-முஸ்லிம்,சிங்களம் மதத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு 2013 கிழக்கு மாகாண கலை இலக்கியப் பெருவிழா சிறப்பு மலரின் முதற்பிரதி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யூ.யு. வெலிக்கலவினால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து கொண்டதோடு கௌரவி அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன், கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருதி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.புஷ்பகுமார, கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் கே.கரணாகரன், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் டக்ளஸ்.ரணசிங்க, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பீடாதிபதி உட்பட கலைஞர்கள் கல்விமான்கள், எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளிகள் என பிரசன்னமாயிருந்தனர்.

இவ் கலை இலக்கியப் பெருவிழாவில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மதத்தவர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment