சம்மாந்துறை: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கல்வி நிறுவனத்தின் சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரி 2014ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.அன்ஸார்(மதனி) தெரிவித்தார்.
குறித்த கல்லூரிக்கு தந்தை மரனித்த முஸ்லிம் மாணவராக இருத்தல், 2014இல் ஆறாம் தரத்தில் கல்வி கற்கக்கூடியவராக இருத்தல், 01.01.2014 திகதி 11 வயதிற்குற்பட்டவராக இருத்தல் உள்ளிட்ட தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இக் கல்வி நிறுவனத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு உணவு,தங்குமிடம்,மருத்துவம்;,சீருடை போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் தகுதியான பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முலம் மத்ரஸா பாடங்கள். அறபு.ஆங்கிலம்.சிங்களம் மொழிகளில் விசேட பயிற்சி. தரம் 6 தொடக்கம் க.பொ.த சா.தரம். க.பொ.த உயர் தரம் வரை அரச பாடசாலைகளுடன் இணைந்த பாடத்திட்டம்;. 11ம் ஆண்டின் பின்னர் கணணி மற்றும் தொழிற் கல்வி பயிற்சிகள். வருடம் தோறும் கல்விச் சுற்றுலா மற்றும் களப்பணிகள். சகல வசதிகளுடன் கூடிய கற்பதற்கு உகந்த இஸ்லாமியச் சுழல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மாணவர்களுக்கு இங்கு வழங்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 2013.11.20ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்வதோடு தகுதியுடையோர் மாணவனின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தித்தின் முலப்பிரதி,தந்தையின் மரண அத்தாட்சிப்பத்திரத்தின் முலப்பிரதி,2014ல் 6ம் தரத்தில் கல்வி கற்பதை உறுதிப்படுத்தும் பாடசாலைக் கடிதம்,2013ம் ஆண்டிற்கான மானவர் தேர்ச்சி அறிக்கை,மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் உள்ளிட்ட ஆவனங்களுடன் 2013.12.16 திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ள நேர்முக பரிட்சைக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் இப்றாகீம் மதனி தெரிவித்தார்.
குறிப்பாக தாய் மரணித்து தந்தை விவாகாரத்துப் பெற்ற மாணவர்கள் இலவச கல்விக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்றும் விரும்பினால் இவர்களும் தந்தையுள்ள மாணவர்களும் மாதாந்த கட்டணத்தை செலுத்தி கல்வி கற்க முடியும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பத்தை அதிபர்,மர்கஸ் தாறுல் ஈமான்,மல்கம்பிட்டி வீதி,சம்மாந்துறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய 067-2261340, 0771507888, 0777397115 இலக்கங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a comment