காத்தான்குடி: காத்தான்குடி உம்மதுர் ரிஸாலா அமைப்பினால் 3வது வருடமாக காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதேசத்திலுள்ள கா-குடி அந்நாஸர் ஆண்கள் வித்தியாலயம் மற்றும் கா-குடி ஸாவியா மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் 2013 ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் விழா 01-11-2013 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் உட்பட அவர்களுக்கு கற்பித்த ஆசிரிய ஆசிரியைகளும் அதிதிகளினால் விருது பரிசும் வழங்கி கெரவிக்கப்பட்டனர். இங்கு விஷேட உரையை அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி நிகழ்த்தினார்.
உம்மதுர் ரிஸாலா அமைப்பின் தலைவர் மௌலவி எம்.எம்.எம்.உவைஸ் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இவ் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், மட்-அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அல்லாப்பிச்சை,மட்-ஸாவியா வித்தியாலய அதிபர் நயீமா அப்துஸ் ஸலாம்,பாலர் பாடசாலை ஆசிரிய ஆலோசகர் பரீதா ஷாஹூல் ஹமீட்,மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவிப் பதிவாளர் அலுவலக பதவி நிலை உதவியாளர் எம்.சி.ஏ.ஜௌபர்,கா-குடி -1ம்-குறிச்சி பெரிய மீரா ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி), கா-குடி மீரா பாலிகா பெண்கள் பாடசாலை ஆசிரியர் மஃறூப், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதம தாதி உத்தியோகத்தர் ஜனூப் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் ,பெற்றோர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Leave a comment