காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனைக் கூடம் திறந்து வைப்பு

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை கூடம் நேற்று வியாழக்கிழமை கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.டயஸினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதித் தலைவர் எம்.எஸ்.சுபைர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஆதில் மற்றும் வைத்தியாசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கண் பரிசோதனைக் கூடம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதற்தடவையாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Published by

Leave a comment