அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு, இறைவனின் சாந்தி உண்டாகட்டும்..
1991 ஆம் ஆண்டு எனது வீட்டுக்கு அண்மையில் ஏற்பட்ட ஒரு கார் குண்டுவெடிப்பின் தாக்கத்தால் கருவறையிலேயே பாதிக்கப்பட்ட நான், (இறைவன் நாட்டப்படி) பிறக்கும்போதே அங்கவீனமுற்றே பிறந்தேன். எனது உடல் ஊனம் காரணமாக சமூகத்தின் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியபோதும் சரியான மூளை வளர்ச்சியைக் கொண்டிருந்த நான், இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க விருப்பமின்றி – பல சிரமங்களுக்கும் மத்தியில் பாடசாலை செல்ல ஆரம்பித்தேன்.
தரம் 8 வரை கல்வி கற்ற எனது வாழ்வில் அந்தக் கறுப்புநாளும் வந்தது. அன்று, நான் கல்வி கற்ற குறிப்பிட்ட பாடசாலையின் அப்போதைய அதிபர் எனது தந்தையை அழைத்து,
‘இவர் பாடசாலைக்கு வருவதனால் இவருக்கு ஒத்தாசை புரியும் ஏனைய பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கின்றது, இவரை படிப்பித்து ஏன் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்…?
இவரால் என்ன செய்ய முடியும்? இவர் என்ன படித்து ஆளாகி உங்களுக்கு உழைத்துத்தரவா போகின்றார்? இன்னும் சிறிது நாளில் எப்படியும் மரணித்துப் போய் விடுவார். ஏன் நீங்களும் கஷ்டப்பட்டு எங்களுக்கும் கஷ்டத்தை கொடுக்கின்றீர்கள்’ என்று மிகவும் கடினமான வார்த்தைகளால் என் தந்தையின் மனதை வருத்தமுறச் செய்தார்.
அதையும் தாங்கிக் கொண்ட என் பெற்றோர், பாடசாலையில் இருந்து நிறுத்தினால் என் கல்வி பாதிக்கப்படுமே என்ற கவலையில் மாற்று வழிகளைச் சிந்தித்து விடா முயற்சியுடன் ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலை, புகழிட அன்பகப் பாடசாலை போன்ற இடங்களில் எனது படிப்பைத்தொடர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எதுவுமே நிரந்தரமாக அமையவில்லை. அப்போதுதான், வீட்டோடு பொழுது போக்கிற்காக வாங்கி வைத்திருந்த கம்யூட்டரைக் கொண்டு எனது வாழ்வில் இறைவன் மறு மலர்ச்சியை ஏற்படுத்தினான்.
கம்ப்யூட்டர் அடிப்படை அறிவையேனும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆட்டோவில் தனியார் நிறுவனமொன்றுக்கு சென்று கொண்டிருக்கும்போது ‘சிக்குன் குன்யா’ வினால் மறுபடியும் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டுக்குள் நடக்க முடியாத நிலையில் முடங்கிக் கிடந்தேன்.
இந்த நேரத்தில்தான், எதேச்சையாக இன்னுமொரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனமும் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் புதிதாய் திறக்க, எனது தந்தையின் வேண்டுகோளை ஏற்று அங்குள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்து எனது ஆர்வத்திற்கு ஏற்றவகையில் கிரபிக்ஸ் (Graphics) துறையில் விஷேட பயிற்றுவிப்புக்களை வழங்கினார்.
இறைவனின் உதவியுடன் மிகவும் துரிதமாகவும் நுணுக்கமாகவும் விடயங்களைக் கற்றுக் கொண்ட எனது திறமையைப் பார்த்துவியந்த அவர் என்னை ஒரு இளம் ‘கிரபிக்ஸ் வடிவமைப்பாளராக (Graphics designer ) தமது நிறுவனத்தில் இணைத்துக் கொண்டதோடு எனக்கென ஒரு சிறிய ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கி வருகின்றார்.
இறைவன் உதவியால் எனது கைவண்ணத்தில் மிளிரும் விளம்பர வடிவமைப்புகளுக்கு உள்ளூர் பத்திரிகைகள், இணையத்தளங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது – இறைவனுக்கே அனைத்துப் புகழும். அதேபோல், எனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் விதமாக
www.razangraphics.info என்ற இணையதளத்தையும் வடிவமைத் துள்ளேன்.
‘இவர் என்ன உழைத்துத் தரவா போகின்றார்? இன்னும் சிறிது நாளில் இறந்து விடுவார்’ என்று ஏளனமாகப் பேசிய நான் படித்த பாடசாலையின் அதிபர் வாயடைத்துப் போகுமளவிற்கு இறைவனின் உதவியுடன் நான் வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற இலட்சியமும் புதிய நம்பிக்கையும் எனக்குள் இப்பொழுது வந்துள்ளது.
அந்த நம்பிக்கைக்கு மெருகூட்டுவதுபோல், எனது கிரபிக்ஸ் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் எனக்கென்று சுயமாக ஒரு மினி பிரஸ் (அச்சகம்) ஒன்றை Razan Graphics என்ற பெயரில் எனது எதிர்காலத்திற்காக அமைத்துக்கொள்ளும் ஒரு திட்டத்தில் தற்போது இறங்கியுள்ளேன்.
அதற்காக போட்டோகொப்பி மெசின் அல்லது டிஜிட்டல் கொப்பியர் மெசின், திறன்மிகுந்த இரண்டு கம்ப்யூட்டர் செட், கலர் பிரின்டர், பிளக் அன்ட் வைட் பிரின்டர், ஸ்கேனர், ஸ்க்ரோல் பைன்டிங், லெமினேட்டிங் மெசின், பேப்பர் கட்டர், ஸ்டேஷனரி ஐட்டம்கள்இ கதிரை மேசை போன்ற தளபாடங்கள்இ ஏனைய சிறியரக பிரின்டிங் மெசினறிகள்இ தட்டச்சு மற்றும் போட்டோ பிரதி வேலைக்காக ஒரு உதவியாளர் போன்றவை சில தேவையாக உள்ளன.
எனக்கு ஒரு கனவு இருக்கின்றது – எனக்காக கஸ்டப்பட்டு பல அவமானங்களையும் தாங்கிக் கொண்ட எனது பெற்றோரை சொந்தமாக உழைத்து உம்றாவுக்காக மக்காவுக்கு அனுப்ப வேண்டும்.
இறைவன் அருளால், சொந்தமாக உழைத்து அந்தக் கனவை நிறைவேற்ற – உங்களின் உதவிகளை நாடுகின்றேன். தாராள மனம்படைத்த வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழும் நண்பர்களே.. சிறியதோ, பெரியதோ – உங்கள் உதவி எனது லட்சியத்தை அடைய நிச்சயம் வழிவகுக்கும்.
பிறந்தது முதலே நிரந்தர நோயாளியாக பல மன உளைச்சல்களைத் தாண்டி, பெற்றோருக்கு பாரமாக எல்லாக் காலமும் இருக்காது சொந்தமாக உழைத்து முன்னேறவேண்டும் என்று ஒரு புதிய தொழில்முயற்சியுடன் உங்கள் முன் வந்திருக்கும் என்னை நீங்கள் நிச்சயம் தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
எனவே, உங்களது அன்பான உதவிகளை பின்வரும் எனது வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றேன். நன்றிகள்..
MJM.Razan,
AC # : 8193001623
Commercial Bank, Kattankudy, Sri Lanka.
Contact Tel : +94774844364 Email : mjmrazan@gmail.com
Youtube URL : http://youtu.be/ZmWpTCBfewE


Leave a reply to Mazaa Cancel reply