காத்தான்குடி அரசியல் களத்தில் மற்றுமொரு பலிக்கடா!

puvi rah– AK-48

காத்தான்குடி: வாரஉரைகல் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் இன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்விடயம் ஊரில் ஆரம்பத்தில் இன்று பரபரப்பாக பேசப்பட்டாலும், உத்தியோகபூர்வமற்ற செய்தியாக நான்கு சுவர்களுக்குள் பின்னர் மறைக்கப்பட்டுப் போனதொரு விடயமாக மக்கள் மத்தியில் திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது.

கஞ்சாவை தனது வீட்டில் மறைத்துவைத்திருப்பதாகவும், அதனை தேடுவதற்கு வந்திருப்பதாகவும் புவி ரஹ்மதுல்லாஹ்வின் வீட்டிற்கு பரிசோதிக்க வந்திருந்த பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டு, இதனடிப்படையில் வார உரைகல் பிரதம ஆசிரியர் கைது செய்யப்பட்டு, பின்னர் இரண்டு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக வழக்கு விசாரணைக்கும் புவி ரஹ்மதுல்லாஹ்வுக்கு அழைப்பாணை விடுவிக்கப்பட்டும் இருக்கின்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அண்மைக்காலமாக காத்தான்குடியில் தாக்கப்பட்டு வரும் பொதுமக்களில் புவி ரஹ்மதுல்லாஹ்வும் ஒருவர். உண்மையை மறைக்காமல் செய்திகளை வெளியிடுவதால் மாத்திரம் அண்மைக்காலமாக அரசியல் பழிவாங்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் புவி ரஹ்மதுல்லாஹ் உட்படுத்தப்பட்டு வருவது உலகறிந்த விடயம்.

காத்தான்குடி அரசியல் சரித்திரத்தில் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் தேர்தலுக்கான காலூன்றலில் இருந்து ஆரம்பித்த அரசியல் அநாகரீகம் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருப்பது 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்த மண்ணுக்கு ஆரோக்கியமானதல்ல!

puvi rah
வாரஉரைகல் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ்

அரசியல் பழிவாங்கல்களாலும், கொலை மிரட்டல்களாலும், மற்றும் மார்க்கப் பிளவுகளாலும் காத்தான்குடியில், கடைகளும், வீடுகளும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும், தனி நபர்கள் தாக்கப்பட்டதும், வாகனங்கள், வீடுகளுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதும், பெட்ரோல் குண்டுகளும், அநாமோதய துண்டுப் பிரசுரங்களும் வெளியிடுவதும் காத்தான்குடியின் அரசியலின் தனிச் சிறப்புக்கள்.

கருத்துக்களை கருத்தால் வெல்ல முடியாதவர்களின் அரசியல், மார்க்க முரண்பாடுகளால் இனிமேலும் காத்தான்குடி அதள பாதாளத்துக்கள் செல்லக் கூடாது.

பிழைகள் இருப்பின் அவற்றை கண்ணியமான முறையில் திருத்திக்கொள்ள, அல்லது தான் தவறற்றவன் என்பதை நிரூபிக்க முன்வரவேண்டுமே தவிர, இவ்வாறான மோசடிகளை கையாண்டு, தனது அரசியல் மற்றும் பொது எதிரிகளை கைது செய்வதும், சிறைகளில் அடைப்பதும் இஸ்லாத்துக்கு முரணாண விடயம் என்பதுடன், அல்லாஹ் அநியாயம் செய்வோரை இவ்வுலகில் தண்டித்து மரணிக்கச் செய்ததையும் வரலாறாக எடுத்துப் பார்க்க வேண்டும்.

சத்தியத்தை முன்வைப்பதற்கு குடும்பமோ, கோத்திரமோ தடைக்கற்கலாக இருக்க முடியாது. இது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அந்தஸ்துகளும், பதவிகளுமே தவிர, சொந்த முதலில் தொடங்கிய வியாபாரமல்ல என்பதை அரசியல் வாதிகளும், ஊர்ப்பிரமுகர்களும், உலமாக்களும் சிந்திக்க வேண்டும்.

Published by

3 responses to “காத்தான்குடி அரசியல் களத்தில் மற்றுமொரு பலிக்கடா!”

  1. கஞ்சா ஒரு பூஞ்செடி கசக்கி ஒரு தம் அடி காத்தான்குடியில் தினமும் 5000 கஞ்சா கட்டு விட்கிறதாம் 8000 போத்தல் விட்பனையாகிறதாம்? நல்ல ஊர் நல்ல முன்னேற்றம்?

  2. முஹம்மது Avatar
    முஹம்மது

    பூவி இந்த ஊரில் உள்ளதையெல்லாம் கூறி பாவி எனப் பெயரெடுத்து அப்பாவியானாலும் நான் இன்று1.11.2013 காலை 9.25 க்கு கடாபி ஹோட்டலில் இருந்ததை கண்டேன்.ஊரின் வினோதப் பொருளான பூவியின் பத்திரிகைக்கு சரியான வருமானம் இல்லையாக்கும்.அந்த சனியன் பிடித்த ஊர் பளாய்க்கு ஒன்று ஜம்மியத்துல் உலமா,இல்லையென்றால் ஜாம்பவான் தாஜுல் ,உண்மையாக கூறப் போனால் வயிற்றுப் பிழைப்புக்கு வசதியான மோதல்கள்.பூவி அந்த நாளில் பொது மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து இந்த ஊரில் பெயரெடுத்தவர் நீர்.ஆனால் இன்னும் உன் ஏமாற்றும் புத்தியை விடவில்லை.ஹிஸ்புல்லாஹ் உன்னை பழிவாங்கினார் என்று உன்னால் ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியுமானால் நீர் இவ்வாறு கொக்கரித்துக் கொண்டிருக்க மாட்டாய் . உன் வீட்டில்கஞ்சா இருந்ததால் நீர் விசாரிக்கப் பட்டிருக்கலாம் அதில் நீர் நிரபதாதி யாகவும் இருந்திருக்கலாம் .ஆனால் பத்திரிகை விற்பனைக்காக ஊரின் மானத்தை பொடுபோக்காக உபயோகிக்காதீர் இன்ஷா அல்லாஹ் நீர் மரணிக்கும் முன் ஒரு முறையாவது உண்மை பேசு.

  3. புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ் Avatar
    புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்

    சுத்தமான பொய்களில் இதுவும் ஒன்று. நான் மரணிக்க முன் ஒருமுறையாவது உண்மை பேசு என்று கேட்டுக் கொண்டுள்ள இந்த ‘கலிகால’ முகம்மதுக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்கள் பிலால் ஹாஜியாருக்கு எதிரான வழக்கின்போது நீதிமன்ற நீதிபதி இருக்கையில் இருந்தவாறே என்னைக் குறித்து, ‘அவரிடம் சத்தியவாக்கு கேட்கத் தேவையில்லை. உயிரே போனாலும் அவர் பொய் சொல்ல மாட்டார். நீங்கள் அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள்’ என்று நீதிமன்ற முதலியிடம் கூறிய வரலாற்று நிகழ்வை அறியவில்லை போலும்.

    கடந்த மாதம் 31ம் திகதி மாலை 03.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் இருந்து பிணையில் வெளிவந்த நான், அன்று மாலை 05.30 மணியளவில்தான் எனது 279வது வாரப் பத்திரிகையை அச்சகத்திற்குக் கொடுத்திருந்தேன்.

    மறுநாள் (01.11.2013) வெள்ளிக்கிழமை காலையில் அச்சகத்திற்குச் சென்ற நான் அதனை எடுத்துக்கொண்டு அவசரமாக ஊருக்கு வந்து முதன் முதலாக பிரதான வீதியிலிருக்கும் உவைஸ் அவர்களின் பேப்பர் கடையில்தான் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பேப்பர் பார்சலைப் பிரித்து அவருக்குரிய பத்திரிகைகளைக் கொடுத்தேன். இதற்கு பேப்பர் கடை உவைஸ் சாட்சி!

    பின் அங்கிருந்து நேராக காத்தர்னகுடி ஜாமியுழ்ழாபிரீன் மார்க்கட்டுக்குச் சென்று அங்கு 10.30 மணி வரை பத்திரிகை விற்று வெள்ளிக்கிழமையான காரணத்தால் கறியும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.

    பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு ஊர்வீதி, புதிய காத்தான்குடி ரெலிகொம் வீதி வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகைகளை விநியோகித்து விட்டு மு.ப. 11.30 மணியளவில் வீட்டை அடைந்தேன்.

    முதலாம் திகதிய காலை நிகழ்வுகள் இவ்விதமிருக்க, அன்று காலை 09.25க்கு கடாபி ஹோட்டலில் இந்த ‘கலிகாலப்’ பொய் முகம்மது என்னைக் கண்டதாகக் கூறியுள்ளது அப்பட்டமான பொய்யாகும்.

    எனவே, இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் எதிராகவே நான் செயற்படுகிறேன். எனது பத்திரிகைப் பணிக்கு இப்படிப்பட்ட ஆயிரம் பொய்யர்கள் நற்சான்றிதழ் வழங்குவதை விட அழ்ழாஹ்வைப் பயந்து, அவனது வேதத்தையும் உள்ளத்தில் சுமந்து இறையச்சத்துடன் வாழக்கூடிய ஓரிருவர் சாட்சி கூறுவது போதுமானது.

    வுபி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி- 04.11.2013

Leave a reply to முஹம்மது Cancel reply