வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு

electionகொழும்பு: 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இதுவரை தமது பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்கள் அது தொடர்பான உரிமைக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தேர்தல்கள் செயலகம் வழங்கிய கால அவகாசம் நாளையுடன் (30ஆம் திகதி) நிறைவு பெறவுள்ளது.

 வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்ட பின்னர் புதிதாக எந்தவொரு பெயரையும் உட்சேர்க்கப்படாமையினால் தற்போது வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக தத்தமது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் தமது பெயர்களை பதிவு செய்துக்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

 எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டில்  தேர்தல் நடாத்தப்படுவதாயின் அதற்காக 2013 ஆம் ஆண்டிற்கான தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. lk

Published by

Leave a comment