கிண்ணியா: கிண்ணியா மஹ்ரூப் நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஹஜ் விழா போட்;டி நிகழ்ச்சிகள் இன்;று கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப்; தலைமையில் அல் அதான் மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற ஹஜ் விழா போட்;டி நிகழ்ச்சிகளில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்குமான பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு பெண்களுக்கான பல போட்டிகளும் இடம்பெற்றன.
இதில் பெண்களுக்கான தேங்காய் துறுவல் போட்டி அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் நகரபிதாவினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு ஏனைய பிரமுகர்களாலும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், எம்.ஐ.நிஜாம்தீன், அதிகாரிகள், இன்னும் முக்கிய உறுப்பினர்களும், பிரமுகர்களும், பொது மக்களென ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
![p.n.1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p-n-11.jpg?w=150&h=112)
![p.n.1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p-n-11.jpg?w=640&h=478)
![p.n.4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p-n-41.jpg?w=640&h=478)
![p.n.5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/p-n-51.jpg?w=640&h=478)
Leave a comment