களுவாஞ்சிகுடி: மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட தேத்தாதீவு,கிழக்கு வீதியில் வசிக்கும் இராசதுரை சத்தியராஜா(வயது 25) என்பவரை காணவில்லையென களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக காணாமல் போனவரின் தாய் ந.இராஜேஸ்வரி தெரிவித்தார்.
கடந்த 23ம் திகதி வியாழக்கிழமை ஆட்டோ சாரதியான எனது மகன் வீட்டில் இருக்கும் போது காலையில் தொலைபேசி அழைப்பு திடீரென வந்தது.உடனேயே அவர் ஆட்டாவை எடுத்துக் கொண்டு ஒரு ஹயர் இருப்பதாக என்னிடம் கூறிவிட்டுச் சென்று விட்டார்.
அன்று சென்றவர் இன்று வரை காணவில்லையென அவர் அழுகையுடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் 26ம் திகதி முறைப்பாடொன்றை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க இன்று செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு கோயில் வீதி காட்டுப் பகுதிக்குள் காணாமல் போன இராசதுரை சத்தியராஜா என்பவரின் ஆட்டோ காத்தான்குடிப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆட்டோ கைப்பற்றப்பட்டதை அடுத்து சந்தேகம் மேலும் எழுவதுடன் இவர் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் இவருடைய சித்தப்பாவான எம்.திச வீரசிங்கத்தின் 0715886224என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு அவர்களுடைய குடும்பம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் 880230697வீ என்பதாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மற்றும் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![ido1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/ido11.jpg?w=64&h=90)
![ido1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/ido11.jpg?w=555&h=772)
![ido2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/ido21.jpg?w=787&h=530)
Leave a comment