குவைத்தில் ஐம்பெரும் விழா!

K-Tic Hijra 1435 5 in 1[1]– K-tic

சிறப்பு விருந்தினராக முனைவர் மு. அப்துஸ் ஸமது பங்கேற்பு!!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு!!!

————————————————-

சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!

ஹிஜ்ரீ 1435 ஃ இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!

கல்வி ஃ சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இஸ்லாமிய சிறப்பு பட்டிமன்றம்!

‘தியாகத்தின் நிறம் பச்சை’ நூல் வெளியீடு!
மாபெரும் விளையாட்டு போட்டி!

 பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

 கடந்த எட்டு வருடங்களுக்கும் முன் ஹிஜ்ரீ 1427 / இஸ்லாமியப் புத்தாண்டு துவங்கும் முஹர்ரம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் ஃ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான மு-வுiஉ (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்து நடத்திக் கொண்டு வருகின்றது.

 அந்த அடிப்படையில் ‘குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic)’ ஏற்பாடு செய்யும் (1) ஹிஜ்ரீ 1435 /இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி (4) ‘தியாகத்தின் நிறம் பச்சை’ நூல் வெளியீடு மற்றும் (5) மாபெரும் விளையாட்டு போட்டி ஆகிய ‘ஐம்பெரும் விழா’, கீழ்க்கண்ட முறையில் குவைத் அவ்காஃப் ஃ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்…

 சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளரும், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும், தமிழ் மாமணி மற்றும் மனித நேயத் தமிழறிஞர் உட்பட பல விருதுகள் பெற்றவரும், ‘வின்’ தொலைக்காட்சியின் ‘அலசல் அரங்கம்’ நாயகரும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான முனைவர் மு. அப்துஸ் ஸமது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

 முதல் நிகழ்ச்சி:

07.11.2013 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத்இ ஃகைத்தான் பகுதியிலுள்ள மு-வுiஉ தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் ‘ஹிஜ்ரா – ஒரு பார்வை’ என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி ஹிஜ்ரீ 1435 ஃ இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இரண்டாம் நிகழ்ச்சி:

08.11.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 6:00 மணி முதல் ஸுப்ஹ் ஃ ஃபஜ்ர் தொழுகையை தொடர்ந்து குவைத்இ ஃகைத்தான் பகுதியிலுள்ள மு-வுiஉ தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல் விளையாட்டுத் திடலில் ‘மாபெரும் விளையாட்டு போட்டி’ நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள தொடர்பு கொள்க: 97215024

 

மூன்றாம் நிகழ்ச்சி:

08.11.2013 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத்இ ஃகைத்தான் பகுதியிலுள்ள மு-வுiஉ தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் ‘சமூகப் பணிகளில் பெண்களுக்கான பங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நான்காம் நிகழ்ச்சி:

08.11.2013 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள ‘மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)’ பள்ளிவாசலில் ‘இன்றைய நம் இளைஞர்கள் செல்லும் பாதை… திட்டமிட்ட பாதையா? திசை மாறிய பாதையா?’ என்ற தலைப்பில் இஸ்லாமிய சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும். இந் நிகழ்ச்சி சமூக விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஐந்தாம் நிகழ்ச்சி:

09.11.2013 சனிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத்இ ஃகைத்தான் பகுதியிலுள்ள மு-வுiஉ தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் ‘இக்ரஃ – வாசிப்பே நம் சுவாசிப்பு!’ என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் முனைவர் மு. அப்துஸ் ஸமது அவர்கள் எழுதிய ‘தியாகத்தின் நிறம் பச்சை’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். குவைத் வாழ் தமிழ் உலமா பெருமக்கள்இ பேராசிரியர்கள் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும்இ சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

 

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார்இ மனைவிஇ மக்கள்இ உறவினர்கள்இ நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்இ உறுப்பினர்கள்இ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

 

குறிப்பு:
•நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுஇ குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும்.
•அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
•இரவு நிகழ்ச்சிகள் அனைத்திலும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
•தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்இ நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள்இ இதழ்கள்இ வலைப்பூக்கள்இ தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்இஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்கத்தின் நிர்வாகிகள்.

•குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும்இ நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் மு-வுiஉ சங்க நிர்வாகிகள்.

அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!!

 உலக மக்கள் அனைவருக்கும் K-Tic ன் இதயங்கனிந்த ஹிஜ்ரீ 1435 /இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 கூடுதல் தகவல்களுக்கும்,  இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
K-Tic Hijra 1435 5 in 1[1]

 

Published by

Leave a comment