காத்தான்குடி நகரசபைக்கு மற்றுமொரு விருது

image[1]– UC-Kattankudy

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை, 2013ம் வருடத்துக்கான, தேசிய வாசிப்பு மாதத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக இலங்கையில் விருதினை வென்றிருக்கின்றது. இம்மாதத்துக்கான தேசிய வாசிப்பு மாதத்துக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.

கல்வி சேவைக்கான அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த விருதினை வழங்கினார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி பொது நூலக செயலாளர் முபாரக் ஆகியோர் நகரசபை சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.

இதேபோன்று கடந்த காலங்களில் மாவட்ட, தேசிய ரீதியில் காத்தான்குடி நகரசபை விருதுகளைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

uc

image[1]

Published by

Leave a comment