மட்டக்களப்பு: அண்மையில் யுனஸ்கோ மேற்கொண்ட ஆய்வின் படி இலங்கையிலிருந்து வருடாந்தம் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர் என உயர்கல்வி அமைச்சர் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று (28)திங்கட்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சௌக்கி மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான கற்பித்தல் அலகுக்கான கட்டிடத் தொகுதி அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் வருடாந்தம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 4இலட்சம் பேர் தோற்றி அதில் 1இலட்சத்து 50ஆயிரம் பேர் உயர்கல்விக்கு தெரிவாகின்றனர். அவர்களில் 26ஆயிரம் பேரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.கடந்த 2005ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுபவர்களின் வீதம் 300ஆக அதிகரிக்கப்பட்டு தற்பொழுது அனுமதிக்கப்படுபவர்பகளின் எண்ணிக்கை 26ஆயிரமாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் 9ஆயிரமாக காணப்பட்டது.
1இலட்சத்து 50ஆயிரம் பேரில் 26ஆயிரம் பேர் அனுமதி பெரும் போது மிகுதி 1இலட்சத்து 24ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறமுடியாமல் பணம் செலவழித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்கிறார்கள்.
குறிப்பாக க.பொ.த உயர்தரத்தில் மருத்துவத்தில் கற்று 3ஏக்களை பெறுபேறாக பெற்றும் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்கள் பாகிஸ்தான்,பூட்டான்,பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர். குறித்த நாடுகளை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்தங்கிய நாடுகளாக காணப்படுகின்றன.
ஆதனை கருத்திற்கொண்டு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காதவர்களுக்கு உள்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் நிர்மாணித்து அவர்களுக்கு உயர்கல்விக்கான வாப்பை உள்நாட்டில் பெற்றுக் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.
அவ்வாறு அனுமதி வழங்கப்படுபவர்களில் 20சதவீதமானோருக்கு இலவசமாக கல்வி கற்பதற்கான புலமைப்பரிpல்களும் வழங்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையினால் வறிய மாணவர்கள் பெரிதும் நன்மையடைவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசு இந்நாட்டு மாணவர்களின் உயர்கல்விக்காக எவ்வளவு பணத்தையும் செலவழிக்க தயாராகவுள்ளது.
உயர்கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 299மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் சௌக்கிய மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான கற்பித்தல் அலகுக்கான கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஏதிர்வரும் வருடம் சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான பீடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. எமது நாட்டு மாணவர்களின் நலன் கருதி அவர்களது கல்வி முன்னேற்றத்திற்காக எவ்வளவு பணமும் இந்த அரசாங்கத்தினூடாக உயர்கல்வி அமைச்சு செலவு செய்ய முழு தயார் நிலையில் உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment