அரச ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றுவர்களுக்கான உற்பத்தி திறன் ஊக்குவிப்பு செயலமர்வொன்று மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (24.10.2013) நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், தேசிய உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நிஹால் ஹேனாநாயக்க, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.முபீன், உதவி மாவட்ட செயலாளர் கே.ரங்கநாதன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.புவனேந்திரன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 78 அரச துறை நிறுவனங்களில் இருந்து 180 பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வளவாளர் டீ.பிரகாஸ் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இங்கு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட பை.எஸ் நடைமுறை தொடர்பாக விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment