காத்தான்குடி: காத்தான்குடி Monash English Academy மொனைஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா 25-10-2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மொனைஸ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி. அஷ்றப் அலியின் ஒருங்கிணைப்பில் மொனைஸ் ஆங்கில அகடமியின் அதிபர் ஜனாபா ஹில்மியா மூபின் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு மொனைஸ் ஆங்கில அகடமி மாணவ மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பாட்டு,கதை, கவிதை,நாடகம்,பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இப்பரிசளிப்பு விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மர்சூக்,காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ. அஸீஸ், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம்.சுபைர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளையின் முன்னாள் தலைவர் எம்.றாபி, மொனைஸ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி.அஷ்றப் அலி, மொனைஸ் ஆங்கில அகடமியின் அதிபர் ஹில்மியா மூபின் ,மற்றும் பாடசாலை அதிபர்கள்,ஆங்கில ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆங்கில பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் கௌரவ அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மர்சூக் ,அகடமி அதிபர் உட்பட ஆசிரியர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![11-DSCF1774[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/11-dscf17741.jpg?w=150&h=112)
Leave a comment