காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவுப் பொதிகள் 25-10-2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி -சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ் உணவுப் பொதிகள் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி மற்றும் அதன் உறுப்பினர்கள் சகிதம் இன்று ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்குவதற்காக இங்கு சமார் 60 உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment