லண்டன்: பாடசாலை வளாகத்தினுள் அதிக அளவில் விஷத் தன்மையுள்ள சிலந்திகள் நுழைந்ததால், மாணவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விதவை சிலந்திகளை போன்று ஸ்டியோடேட்டா நொபிலிஸ் என்ற வகை தற்போது இங்கிலாந்தில் பரவலாகக் காணப்படுகிறது.
மேலும், அந்நாட்டில் கொடிய விஷமுள்ள சிலந்திகளின் 12 வகைகள் இருப்பதாகவும், ஆயினும் சிலந்தி கடித்த சம்பவங்கள் அங்கு குறைவு என்றும், அவ்வாறு இருந்தாலும் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொடுப்பதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் சிலந்திகள் அதிகமாகக் காணப்பட்டதால் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மேல்நிலைப் பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள குளுசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள டீன் அகடெமி மேல்நிலைப் பாடசாலையில் நேற்று திடீரென சிலந்திகள் அதிகளவில் காணப்பட்டன.
கருப்பு விதவை சிலந்திகளின் ஒரு வகையான கொடிய விஷத்தன்மை கொண்ட சிலந்திகள் அவை என அடையாளம் காணப்பட்டன. எனினும், பாடசாலையில் காணப்பட்ட சிலந்திகள் மனிதர்கள் யாரும் கடிக்கவில்லை. ஆயினும், இந்த சிலந்திகளின் நோய்த்தொற்று நீக்கவேண்டி பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர் நிர்வாகிகள்.
சிலந்திக் கடி தேனீ கொட்டுவது போலவும், வீங்கியும் காணப்படும். ஆனால் யாரும் இறப்பதற்கு சிலந்திக்கடி காரணமாக இருந்ததில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் காணப்பட்டவை கொடுமையான சிலந்திகள் இல்லை. மேலும், அவை மனிதர்களைத் தேடியும் வரவில்லை என வெப்ப மருத்துவம் சார்ந்த லிவர்பூல் பள்ளியில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் லல்லு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த வகை சிலந்திகள் கடித்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அசௌகரியமாக இருக்கும் ஆனால் அது மிகவும் அரிதாக நடைபெறும் ஒரு விஷயம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Leave a comment