லண்டன்: பிரிட்டனின் ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தை முஸ்லிம்கள் வாங்கியுள்ளனர். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்தே அது விற்கப்பட்டுள்ளது. தேவாலயம் மூடப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் அதனை வாங்கியதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு வழிபாட்டுக்குச் செல்வதாகவும் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் பணம் கிறிஸ்தவர்களின் நன்மைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த தேவாலயத்தை வாங்கியவரின் விபரம் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படு த்தப்படவில்லை. ஆனால் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினர் அதிக விலை கோரியிருப்பதாக தேவாலயத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரிட்டனில் 15 வீதமானோர் மாத்திரமே குறைந்தது மாதம் ஒன்றுக்கு ஒரு முறையாவது தேவாலயத்திற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. ஏனைய கணக்கெடுப்பில் ஐரோப்பாவிலேயே மிகக் குறைவானோர் தேவாலயத்திற்கு செல்வது பிரிட்டனில் என கூறப்பட்டுள்ளது.
tk
Leave a comment