திருகோணமலை: திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இவை துர்நாற்றம் வீசியதால் நகர சபையின் சுகாதார தொழிலாளர்களால் துப்புரவு செய்து புதைக்கப்பட்டது. மாரி காலத் தொடக்கத்தில் இச்சம்பவம் தற்பொழுது இடம்பெற்றிருக்கின்றது.
கடந்த வருடம் காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மீன்கள், கடல் ஆமைகள் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதிங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படம்: தினகரன்)

Leave a comment