மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு இம்மாதம் 25ஆம்திகதி முதல் 27ஆம்திகதி வரை கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், உள்ளுர் அறிவுத்திறனை வளர்த்தெடுக்கும் செயற்திட்டத்திலும் மாவட்ட செயலகம் கைவினை உள்ளுர் உற்பத்திறனாக என்ற தொனிப்பொருளில் இந்த கண்காட்சி விற்பனையை நடத்துவதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் 25ஆம்திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பித்து வைப்படவுள்ளது. அதனையடுத்து தினமும் பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறும்.
இக் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், அமைப்புக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
இவர்களுக்கென 18 காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மாவட்டத்தின் பனை, பன், தென்னை, மரம் உள்ளிட்டவற்றினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், மற்றும் அலங்காரப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment